Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை .. கிடு கிடுவென உயர்ந்த காய்கறி விலை

அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை .. கிடு கிடுவென உயர்ந்த காய்கறி விலை

By: vaithegi Mon, 10 July 2023 12:54:38 PM

அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை ..  கிடு கிடுவென உயர்ந்த காய்கறி விலை

இந்தியா: தக்காளி விலையை போல வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு .. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியானது இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து 1கிலோ தக்காளி ரூ. 150க்கு விற்பனை செய்யப்பட்டது.

அரசு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க ரேஷன் கடைகளில் தக்காளி ரூ. 60 விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது.

vegetable,tomato ,காய்கறி ,தக்காளி

அதனால் தக்காளி விலையை போல சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற காய்கறி விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினத்தை விட சின்ன வெங்காயம் ரூ.20 உயர்ந்து உள்ளது. பச்சை மிளகாய் விலை ரூ. 10 உயர்ந்து உள்ளது.

மேலும் காய்கறி விலை ரூ .2 முதல் ரூ.3 வரை அதிகரித்து இருக்கிறது. பீன்ஸ் விலை குறைந்துள்ளது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் விலை எப்போது குறையும் மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Tags :