Advertisement

வெயிலால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டன

By: vaithegi Fri, 12 May 2023 1:09:25 PM

வெயிலால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டன

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டு விட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கோடை மழை பெய்துவந்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்திருந்தது. ஆனால் கடந்த 1 வாரத்துக்குமுன் கோடை மழையால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

tourists,summer sun,pool ,சுற்றுலா பயணிகள்,கோடை வெயில்,குற்றாலம்

இதனை அடுத்து மழை குறைந்ததை தொடர்ந்து மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே கோடை வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கிவுள்ளது.

இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து வறண்டு விட்டன. பழைய குற்றாலம் அருவியில் நேற்று பாறையை ஒட்டி தண்ணீர் வழிந்தது. மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.

Tags :