Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த முக கவசம் நல்லது என்பது குறித்து டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி

எந்த முக கவசம் நல்லது என்பது குறித்து டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி

By: Karunakaran Thu, 13 Aug 2020 3:31:32 PM

எந்த முக கவசம் நல்லது என்பது குறித்து டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகிய மூன்றும்தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் முக கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று முக கவசம் அணிந்து வருகின்றனர்.

duke university,researchers,face shield,corona virus ,டியூக் பல்கலைக்கழகம், ஆராய்ச்சியாளர்கள், முக கவசம், கொரோனா வைரஸ்

தற்போது, 14 விதமான முக கவசங்களை அமெரிக்காவில் டர்ஹாம் நகரில் அமைந்துள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இதில் சுகாதார ஊழியர்கள் அணிகிற வால்வுகள் இல்லாத என்-95 முக கவசங்கள்தான் மிகவும் பயனுள்ள முக கவசம் என்று அவர்கள் கண்டறிந்தனர். நெக் பிளஸ் வகை முக கவசம்தான் கொரோனா பரவல் அபாயத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டனாஸ் வகை முக கவசம் மோசமான முக கவசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பின்னலாடை முக கவசம் மூன்றாவது மோசமான முக கவசம் என கண்டறிந்துள்ளனர். டாக்டர்கள் அணிகிற சர்ஜிக்கல் முக கவசம், ஆய்வில் நன்றாக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. கையால் செய்யப்பட்ட பருத்தி முக கவசமும் நன்றாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எல்லோரும் முக கவசம் அணிந்தால், நீர்த்துளிகள் 99 சதவீதம் வரை வேறொருவரை அடைவதற்கு முன் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :