Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும்

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:26:44 AM

வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும்

இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும்... வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

chief,electoral officer,duplicate,voter list ,
தலைமை, தேர்தல் அதிகாரி, இரட்டைப்பதிவு, வாக்காளர் பட்டியல்

எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 15- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Tags :
|