Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துர்கா பூஜை பண்டிகை ..சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

துர்கா பூஜை பண்டிகை ..சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Fri, 20 Oct 2023 11:09:38 AM

துர்கா பூஜை பண்டிகை  ..சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : சென்னை சென்ட்ரலில் இருந்து அக். 23, 30, நவ.6 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்குசிறப்புக் கட்டண ரயில் (06073) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு புவனேஷ்வரை சென்றடையும்.

இதனை அடுத்து மறுமார்க்கமாக, புவனேஷ்வரில் இருந்து வருகிற அக். 24, 31, நவ.7 ஆகியதேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்தடையும்.

weekly special train,durga puja festival , வாராந்திர சிறப்பு ரயில் ,துர்கா பூஜை பண்டிகை

அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற அக். 21, 28, நவ.4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06071) புறப்பட்டு, 3-ம் நாள்(திங்கள்) அதிகாலை 3.45மணிக்கு மேற்குவங்கம் மாநிலம்சந்திரகாச்சியை அடையும்.

அதை தொடர்ந்து மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற அக். 23, 30, நவ.6 ஆகியதேதிகளில் காலை 5 மணிக்குசிறப்புக் கட்டண ரயில் (06072) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இச்சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

Tags :