Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்...இன்று முதல் அமலுக்கு வருகிறது!

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்...இன்று முதல் அமலுக்கு வருகிறது!

By: Monisha Mon, 17 Aug 2020 09:23:44 AM

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்...இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தாலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடரும் என்றே அரசு அறிவித்தது. என்றாலும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

e pass,curfew,tamil nadu,corona virus,aadhar ,இ பாஸ்,ஊரடங்கு,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,ஆதார்

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், "தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க 17-ந் தேதி (இன்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இ-பாஸ் தளர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக, இ-பாஸ் கிடைக்கும்.

Tags :
|
|