Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்

இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்

By: vaithegi Tue, 28 Feb 2023 11:07:44 AM

இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்

இந்தியா: துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஏகப்பட்ட உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதையடுத்து அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளாத நிலையில், அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 4.05 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போன்று தஜிகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

earthquake,india,afghanistan,tajikistan ,நிலநடுக்கம்,இந்தியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான்

அதை தொடர்ந்து இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணிக்கு இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என பதிவாகி இருக்கிறது. இதையடுத்து இது குறித்து தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

Tags :
|