Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயில் ... முன்கூட்டியே பள்ளிக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்

வெயில் ... முன்கூட்டியே பள்ளிக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்

By: vaithegi Sun, 23 Apr 2023 11:24:21 AM

வெயில்  ...  முன்கூட்டியே பள்ளிக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதாவது, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதியும்,

அதையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 20-ம் தேதியும் முடிவடைந்தது. மேலும், 1 முதல் 9 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறயிருக்கிறது.

summer,vacation ,வெயில்  ,விடுமுறை

இந்த நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பெரும் சிரமமாக இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து, நேற்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் உயர் கல்வி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த போது பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, வெயிலின் அளவைப் பொறுத்து 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடிய விரைவிலேயே விடுமுறை விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :
|