Advertisement

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம்

By: vaithegi Tue, 19 July 2022 10:41:27 AM

ஆப்கானிஸ்தானில் இன்று காலை  நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே 137 கி.மீ. தொலைவில் இன்று காலை சுமார் 6.40 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

earthquake,afghanistan ,நிலநடுக்கம்,ஆப்கானிஸ்தான்

இந்த நிலநடுக்கம் 170 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. அந்நாட்டில் கடந்த ஜூன் இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு குறைந்தது ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1,500க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர்.

இதை அடுத்து ஒரு மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அதிர்வு ஏற்படுத்தியுள்ளது.

Tags :