Advertisement

துருக்கி, அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

By: Nagaraj Fri, 11 Aug 2023 07:23:26 AM

துருக்கி, அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

துருக்கி: துருக்கியின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் பீதியில் உறைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியது நினைவிருக்கலாம்.

earthquake,turkey,people panic,damage details,road ,நிலநடுக்கம், துருக்கி, மக்கள் பீதி, சேத விவரங்கள், சாலை

இதேபோல் அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் படிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags :
|