Advertisement

அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

By: vaithegi Sat, 21 Jan 2023 11:50:40 AM

அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

அர்ஜெண்டினா: தேசிய நில அதிர்வு மையத்தின்படி, இன்று அதிகாலை 3:39 மணியளவில் அர்ஜென்டினாவின் கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிமீ தொலைவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது குறித்து நிலநடுக்கம்: 6.5, 21-01-2023 அன்று ஏற்பட்டது, 03:39:37 IST, லேட்: -26.82 & நீளம்: -63.36, ஆழம்: 586 கிமீ, இருப்பிடம்: கார்டோபாவின் 517 கிமீ N" என்று NCS ட்வீட் செய்துள்ளது.

earthquake,argentina ,நிலநடுக்கம்,அர்ஜெண்டினா

இந்நிலநடுக்கமானது அர்ஜென்டினாவின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோ மாகாணத்தில் உள்ள மான்டே கியூமாடோவில் இருந்து 600 கிலோமீட்டர் (372.82 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் பராகுவே மற்றும் அர்ஜென்டினாவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போதைக்கு பலி அல்லது பலத்த சேதம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

Tags :