Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

குஜராத் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

By: Monisha Mon, 15 June 2020 4:52:12 PM

குஜராத் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டின் வடமேற்கு பகுதியில் 122 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் அருகே இன்று மதியம் 12.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 82 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

gujarat,earthquake,national seismic center,richter scale ,குஜராத்,நிலநடுக்கம்,தேசிய நில அதிர்வு மையம்,ரிக்டர் அளவுகோல்

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. மேலும் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதமாகியது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :