Advertisement

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

By: vaithegi Sun, 30 Apr 2023 11:38:07 AM

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் : 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் .... ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை சுமார் 5.15 மணிக்கு மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் இருந்து 5 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் பதறியடித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

earthquake,jammu and kashmir ,நிலநடுக்கம்,ஜம்மு காஷ்மீர்

இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், இதுவரை அந்த பகுதியில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தான் கூறப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியைப் போலவே, ஜம்மு மற்றும் காஷ்மீரும் நில அதிர்வு தீவிர மண்டலத்தின் கீழ் வருகிறது. அதனால்தான், ஜம்மு காஷ்மீரில் 20 மாவட்டங்களிலும் அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்களை (EOC) அமைக்க முடிவு செய்துள்ளது

Tags :