Advertisement

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இன்று நிலநடுக்கம்

By: Karunakaran Wed, 08 July 2020 11:31:04 AM

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இன்று நிலநடுக்கம்

இந்திய கடந்த சில வாரங்களுக்கு முன் மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்தன. மேலும் நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் எல்லையோர பகுதியான ரஜோரியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

earthquake,jammu and kashmir,rajouri area,richter size ,பூகம்பம், ஜம்மு-காஷ்மீர், ராஜோரி பகுதி, ரிக்டர் அளவு

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பீதியடைந்தனர். நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரஜோரி மாவாட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags :