Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பேரிடர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பேரிடர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By: Nagaraj Mon, 06 Feb 2023 11:59:54 PM

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பேரிடர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் மற்றும் பேரிடர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதில், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இன்று யாராவது சிக்கியிருந்தால் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

earthquake,new delhi,prime minister modi, ,நிலநடுக்கம், பிரதமர் மோடி, புதுடெல்லி


இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரிடர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :