Advertisement

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

By: vaithegi Thu, 23 Feb 2023 10:06:01 AM

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் : தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .... கடந்த சில நாட்களாக உலகநாடுகளில் அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதேபோன்று பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

earthquake,tajikistan ,நிலநடுக்கம்,தஜிகிஸ்தான்

இந்த நிலையில், தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதங்கம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Tags :