Advertisement

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் நிலநடுக்கம்

By: vaithegi Thu, 16 Mar 2023 10:07:19 AM

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் நிலநடுக்கம்

வெலிங்டன்: இன்று நிலநடுக்கம் .. நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ....

நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு போன்றவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.

earthquake,new zealand ,நிலநடுக்கம் ,நியூசிலாந்து

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்திலிருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது. 300 கிமீ சுற்றளவு கொண்ட மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :