Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யுனான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன; 4 பேர் பலி... 24 பேர் படுகாயம்

யுனான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன; 4 பேர் பலி... 24 பேர் படுகாயம்

By: Nagaraj Wed, 20 May 2020 09:06:25 AM

யுனான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தன; 4 பேர் பலி... 24 பேர் படுகாயம்

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கின. மேலும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வுகான் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனால் ஒட்டுமொத்த சீனாவும் ஆட்டம் கண்டது. தற்போதுதான் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது.

yunnan,earthquake,4 killed,24 injured,buildings ,யுனான், நிலநடுக்கம், 4 பேர் பலி, 24 பேர் படுகாயம், கட்டிடங்கள்

ஊரடங்கை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை சீனா கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு சீன மக்கள் திரும்பி வரும் நிலையில் நிலநடுக்கம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுனானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கியாஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

yunnan,earthquake,4 killed,24 injured,buildings ,யுனான், நிலநடுக்கம், 4 பேர் பலி, 24 பேர் படுகாயம், கட்டிடங்கள்

யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியபடி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இதில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|