Advertisement

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று நிலநடுக்கம்

By: Karunakaran Mon, 13 July 2020 09:51:12 AM

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று நிலநடுக்கம்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே நிலநடுக்கம்,கனமழை போன்ற இயற்கை பேரிடர்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குறித்து இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

andaman and nicobar,earthquake,islands,shakes ,அந்தமான் மற்றும் நிக்கோபார், பூகம்பம், தீவுகள், நடுக்கம்

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும் அங்கு இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை

Tags :