Advertisement

சீனா மற்றும் கிர்கிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

By: vaithegi Mon, 30 Jan 2023 12:30:40 PM

சீனா மற்றும் கிர்கிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

கிர்கிஸ்தான் : இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ..... சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரிலிருந்து தென்கிழக்கே 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

earthquakes in china and kyrgyzstan today ,நிலநடுக்கம்,கிர்கிஸ்தான்

இதேபோன்று, கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கேக் நகரிலிருந்து கிழக்கு தென்கிழக்கே 726 கி.மீ. தொலைவில் அதிகாலை சுமார் 5.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Tags :