Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னி பாத் திட்டத்தின் போராட்ட எதிரொலி .....நொய்டாவில் முழு ஊரடங்கு

அக்னி பாத் திட்டத்தின் போராட்ட எதிரொலி .....நொய்டாவில் முழு ஊரடங்கு

By: vaithegi Tue, 21 June 2022 9:31:29 PM

அக்னி பாத் திட்டத்தின் போராட்ட எதிரொலி .....நொய்டாவில் முழு ஊரடங்கு

நொய்டா: மத்தியஅரசு ராணுவம், கடற்படை,விமானப் படையில் 4 ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி அமர்த்துவதற்கான அன்கிபாத் என்னும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தில் சேருபவர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர்,80 சதவீதம் நபர்கள், வேலையிலிருந்து விளக்கமடைவார்கள் என்றும் 20 சதவீதம் பேர் மட்டுமே பணியை தொடர முடியும் என்று அறிவித்திருந்தது.

இந்த அக்னி திட்டம் தற்காலிக பணி மட்டும் தருவதால், ஓய்வூதியமும், ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்த சலுகைகளும் இல்லை என்பதால் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

full curfew,agni bath,army ,முழு ஊரடங்கு ,அக்னி பாத்,ராணுவ வீரர்


குறிப்பாக பிஹார், உத்தரப் பிரதேசம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது இதுவரை 387 பேர் கைது செய்துள்ளதாகவும், உத்திர பிரதேச தலைநகர் நொய்டாவில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 15 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, போராட்டத்தின் ஆதிக்கம் மிக அதிகம் வலுத்துள்ளதால் நொய்டாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தின் போது 8 காவலர்கள், ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags :