Advertisement

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ..மக்கள் அதிர்ச்சி..

By: Monisha Mon, 04 July 2022 8:52:58 PM

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ..மக்கள் அதிர்ச்சி..

இலங்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொது மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.தினம் தினம் விலைவாசி அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்து உள்ளனர்.
இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் நாடே முடங்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் மசாலா பொருட்களின் விலைகளும் சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் 22% வரை உயரத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

sri lanka,economic,crisis,people ,இலங்கை,பொது மக்கள் ,எரிபொருள்,மசாலா,

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயரத்தபட உள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் உப்பு தண்ணீர் குடித்து வாழும் மக்கள். பெட்ரோல், டீசல், உணவு பொருட்களுக்கு கடும் தட்டு பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகள் இலங்கைக்கு உதவுகின்றது. இதில் பலர் அகதிகளாக இருகின்றனர். வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி செல்லும் மக்கள். பிற நாடுகளில் இருந்து நிவாரணம் பொருட்கள் செய்து உதவுகின்றனர்.

Tags :
|