Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்

எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்

By: Nagaraj Fri, 07 Oct 2022 3:24:32 PM

எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்

வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் 2022-2023 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுக்கு முன்னதாக தெற்காசிய பொருளாதார அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

உலக நாடுகளை விட இந்தியா வலுவாக மீண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னறிவிப்பு 6.5 சதவீதமாக உள்ளது, இது முந்தைய ஜூன் கணிப்பை விட ஒரு சதவீதம் குறைந்துள்ளது.

countries,expected,forecast,uncertainty,world bank ,உலக வங்கி, நிதியாண்டில், வட்டி விகிதங்கள், வளர்ச்சி

நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகள் காரணமாக தனியார் முதலீட்டு வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. 2023 நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை உலக வங்கி திருத்துவது இது மூன்றாவது முறையாகும்.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் கூறியதாவது கொரோனா தொற்றுநோயின் முதல் கட்டத்தின் போது, ​​கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வந்தது.

உலகளாவிய தேவை குறைவது நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும். முந்தைய ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் குறிப்பாக சேவைத் துறை மற்றும் சேவை ஏற்றுமதியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Tags :