Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 05ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வருகிற 05ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

By: vaithegi Sun, 01 Oct 2023 4:26:23 PM

வருகிற 05ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  ...  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் -5ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பொதுப் பணிகளை சரிசெய்யத் தவறிய விடியா திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்,

அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இந்த திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெரு-ஏரிக்கரை தெரு சந்திப்பில், வருகிற 5.10.2023 ( வியாழக்கிழமை) அன்று கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

edappadi palaniswami,protest demonstration ,எடப்பாடி பழனிசாமி , கண்டன ஆர்ப்பாட்டம்

இதையடுத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும்,

கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ளவும். விடியா திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெறவுள்ள இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :