Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள்‌ அனைவரும்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ்ந்திடுக ..எடப்பாடி பழனிசாமி

மக்கள்‌ அனைவரும்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ்ந்திடுக ..எடப்பாடி பழனிசாமி

By: vaithegi Sat, 11 Nov 2023 10:25:07 AM

மக்கள்‌ அனைவரும்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ்ந்திடுக   ..எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, “மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன்‌ எனும்‌ அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள்‌, இருள்‌ விலகி ஒளி பிறக்கும்‌ தினமாகவும்‌, தீமைகள்‌ அழிந்து நன்மைகள்‌ சுடர்விட்டு பிரகாசிக்கும்‌ தினமாகவும்‌ மக்களால்‌ கருதப்படுகிறது.

இதையடுத்து இந்த தீபாவளித்‌ திருநாளில்‌ மக்கள்‌ அதிகாலை எழுந்து எண்ணெய்‌ தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள்‌ இல்லங்களில்‌ தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார்‌ உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன்‌ கொண்டாடி மகிழ்வார்கள்‌.

edappadi palaniswami,people,diwali festival ,எடப்பாடி பழனிசாமி,மக்கள்‌ ,தீபாவளி பண்டிகை

தித்திக்கும்‌ இத்தீபாவளித்‌ திருநாளில்‌, துன்பங்கள்‌ நீங்கி என்றும்‌ இன்பங்கள்‌ மலரும்‌ தீப ஒளியாக இத்தீபாவளி அமையட்டும்‌. மக்கள்‌ அனைவரது வாழ்விலும்‌ இன்பம்‌ பெருகிட இறைவனின்‌ அருள்‌ கிடைக்கட்டும்‌. இன்று பெருகும்‌ இன்பம்‌ அனைவரிடமும்‌ என்றும்‌ நிலைக்கட்டும்‌.

மேலும் மக்கள்‌ அனைவரும்‌ எல்லா நலமும்‌, வளமும்‌ பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும்‌ என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌, புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில்‌, இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும்‌ ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்‌” என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :
|