Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

By: vaithegi Wed, 12 July 2023 1:04:41 PM

அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

சென்னை:மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் .... தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை பல செயல்முறைகளை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது.இதையடுத்து அதன்படி நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே இதற்காக ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் கேள்விகளை தயார் செய்யும் முறை குறித்தும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

education department,online exams ,கல்வித்துறை ,ஆன்லைன் தேர்வுகள்

இந்த கேள்விகள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தின் பக்கத்தில் பதிவிட்டப்படும். மேலும் மாணவர்களுக்கு அருகில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஹைடெக் ஆய்வகத்தில் வைத்து ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் மற்றும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவுள்ளது.

Tags :