Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

By: vaithegi Thu, 08 Sept 2022 7:27:17 PM

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை


இந்தியா: இந்த ஆண்டு நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுகளை எழுதினர். இதையடுத்து நாடு முழுவதும் 497 நகரங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்விற்கான முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

நேற்று இரவு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் மாணவர்கள் ரேங்கிங்கில் பயன்படுத்தப்பட்ட முறைகள் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் இந்த முறை தேர்வில் தோல்வி அடைந்துள்ளது பலரையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

neet exam,anpil mahesh ,நீட் தேர்வு ,அன்பில் மகேஷ்

இதை அடுத்து 14 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வெறும் 9 லட்ச மாணவ மற்றும் மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு என மனநல ஆலோசனைக்கு புதிய ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பல அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர் கூறியதாவது, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலரும் பயத்தில் இருக்கின்றனர். நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்து கொள்ள நினைக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

Tags :