Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பள்ளிகள் திறப்பில் எற்பட்ட குழப்பதிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்

தமிழக பள்ளிகள் திறப்பில் எற்பட்ட குழப்பதிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்

By: vaithegi Sat, 11 June 2022 9:02:41 PM

தமிழக பள்ளிகள் திறப்பில் எற்பட்ட குழப்பதிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்

10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதன்படி வருகிற ஜூன் 13ம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school education,schools,corona ,பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் , கொரோனா

அதனை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் பள்ளி திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தில் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளும் மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளிகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு முடிக்க படும் என கூறியுள்ளார்.

Tags :