Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எட்வர்ட் பிலிப்

பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எட்வர்ட் பிலிப்

By: Karunakaran Sat, 04 July 2020 11:24:19 AM

பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எட்வர்ட் பிலிப்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார பாதிப்பை அடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் ஏற்று கொண்டார். தற்போது பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் ஹஸ்டெக்சை அதிபர் நியமனம் செய்துள்ளார்.

edward philip,resigned,prime minister,france ,எட்வர்ட் பிலிப், ராஜினாமா, பிரதமர், பிரான்ஸ்

பிரதமராக பதவி வகித்த எட்வர்ட், அதிபர் இம்மானுவேலை விட அதிக மக்கள் செல்வாக்கு உடையதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் எட்வர்ட் அதிபராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்வர்ட் அதிபராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதால், அதிபர் இம்மானுவேல் தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்து அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.

Tags :