Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- நேபாளம் உறவை உயர்த்த கடும் முயற்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்தியா- நேபாளம் உறவை உயர்த்த கடும் முயற்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

By: Nagaraj Thu, 01 June 2023 7:53:17 PM

இந்தியா- நேபாளம் உறவை உயர்த்த கடும் முயற்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடில்லி: கடும் முயற்சி மேற்கொள்ளப்படும்... இந்தியா - நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசன்டாவை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

video,freight train service,border issues,settlement,emphasis ,காணொலி, சரக்கு ரயில் சேவை, எல்லை பிரச்னைகள், தீர்வு, வலியுறுத்தல்

பின்னர், நேபாள பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவை சூப்பர்ஹிட்டாக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார். நேபாளத்துடன் டிஜிட்டல் பேமண்ட் சேவை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய பிரசண்டா, எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

முன்னதாக, பீகாரின் பத்நாகா - நேபாளம் இடையே சரக்கு ரயில் சேவையை இரு நாட்டுத் தலைவர்களும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.

Tags :
|