Advertisement

முட்டை விலை உயர்வு

By: vaithegi Tue, 25 Oct 2022 3:27:13 PM

முட்டை விலை உயர்வு

சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள் தமிழகத்திற்கு மட்டுமல்ல பிற மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு முட்டை விலையானது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது

இதனை அடுத்து தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி தொடங்கியுள்ளதாலும் முட்டை நுகர்வு மற்றும் தட்டுப்பாடு உயர்ந்துள்ளது.

eggs,price ,முட்டை ,விலை

கடந்த 22ம் தேதி நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை மற்றும் சந்தை விலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஒரு முட்டையின் விலையை 15 காசுகள் உயர்த்தி ரூ. 4.60 காசுகளாகவும் அதிகரிக்கப்பட்டது.

தற்போது முட்டை மற்றும் கோழி கறியின் நுகர்வு அதிகரித்துள்ளதால் மீண்டும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் விலை 15 பைசா உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையை தொடர்ந்து கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.220 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|