Advertisement

முட்டை விலை உயர்ந்து வருகிறது

By: vaithegi Wed, 18 Jan 2023 10:21:15 PM

முட்டை விலை உயர்ந்து வருகிறது

நாமக்கல் : நாமக்கல் பகுதிகளிலிருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதிஉயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும் விற்பனையும் உயர்ந்து உள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது.அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது.

இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.65 காசுகள் என்பது கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலை ஆகும்.

eggs,farm purchase ,முட்டை ,பண்ணைக் கொள்முதல்

இதையடுத்து தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|