Advertisement

முட்டை விலை நேற்று ஒரே நாளில் சரிவு

By: vaithegi Sat, 29 Apr 2023 10:35:03 AM

முட்டை விலை நேற்று ஒரே நாளில் சரிவு

நாமக்கல் : முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.55 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைத்து ரூ. 4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. ஏறு முகத்திலிருந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 20 காசுகள் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்துள்ளது.

egg,namakkal ,முட்டை ,நாமக்கல்

ஆனால் அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து கொண்டு வருகிறது. இதுவே விலை குறைவுக்கு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.

மேலும் இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|