Advertisement

கடந்த நாட்களில் முட்டை விலை தொடர் சரிவு

By: vaithegi Sun, 29 Jan 2023 9:29:36 PM

கடந்த நாட்களில் முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல் :முட்டை விலை தொடர் சரிவு ... முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.90 காசுகளிலிருந்து 30 காசுகள் குறைத்து 4.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று மாலை அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த விலை நாளைகாலை முதல் அமலுக்கு வருகிறது.கடந்த 9 நாட்களில் முட்டை விலை ரூ.1.05 காசுகள் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைய தொடங்கி உள்ளது.

egg,namakkal,national egg coordinating committee ,முட்டை ,நாமக்கல் ,தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வருகிறது இதுவே விலை சரிவுக்கு காரணம் என்கின்றனர் கோழிப் பண்ணையாளர்கள்.தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கலில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.

எனவே இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|