Advertisement

முட்டை விலை குறைவு

By: vaithegi Sat, 21 Jan 2023 09:21:51 AM

முட்டை விலை குறைவு

நாமக்கல் : விலை குறைந்தது ... முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.65 காசுகளில் இருந்து 20 குறைத்து 5.45 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது.கடந்த 12 நாட்களாகவே முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.65 ஆக நீடித்து வந்தது. இந்த விலை தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலை ஆகும்.

egg,farm purchase price ,முட்டை ,பண்ணை கொள்முதல் விலை

அதனைத்தொடர்ந்து தற்போது முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் அதிரடியாக 20 காசுகள் சரிவடைந்துள்ளது. தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.

இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :
|