Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்கு எதிராக கை கோர்த்துள்ள 8 நாடுகளை சேர்ந்த எம்.பி.க்கள்

சீனாவுக்கு எதிராக கை கோர்த்துள்ள 8 நாடுகளை சேர்ந்த எம்.பி.க்கள்

By: Nagaraj Sun, 07 June 2020 1:59:46 PM

சீனாவுக்கு எதிராக கை கோர்த்துள்ள 8 நாடுகளை சேர்ந்த எம்.பி.க்கள்

சீனாவுக்கு எதிரான கை கோர்த்துள்ளனர் எட்டு நாடுகளை சேர்ந்த எம்.பி.க்கள்.

மனித உரிமைகளுக்கும், உலக வர்த்தகத்திற்கும் சீனா எதிரானதாக இருப்பதாக குற்றம் சாட்டி, எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.

நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்ற இந்த அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய எட்டு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் இணைந்து சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு முட்டுக்கட்டை போடப்போவதாக அறிவித்துள்ளனர்.

china,warning,mps,affairs,hong kong ,சீனா, எச்சரிக்கை, எம்.பி.க்கள், விவகாரம், ஹாங்காங்

இதனிடையே ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் கொரோனா பிரச்னை, மறுபக்கம் இந்தியாவுடன் எல்லை பிரச்னை என்று சீனா சிக்கலில் சிக்கி உள்ளது. இதற்கிடையில் ஹாங்காங் பிரச்னையும் சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|