Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புகை வண்டியை புகை இல்லாமல் மாற்றி சாதித்த எட்டாம் வகுப்பு படித்த ஊழியர்..திறமை இருந்தால் எல்லாம் சாதிக்கலாம்..

புகை வண்டியை புகை இல்லாமல் மாற்றி சாதித்த எட்டாம் வகுப்பு படித்த ஊழியர்..திறமை இருந்தால் எல்லாம் சாதிக்கலாம்..

By: Monisha Sun, 10 July 2022 8:53:05 PM

புகை வண்டியை புகை இல்லாமல் மாற்றி சாதித்த எட்டாம் வகுப்பு படித்த ஊழியர்..திறமை இருந்தால் எல்லாம் சாதிக்கலாம்..

தமிழ்நாடு: ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.

ஆங்கிலேயர் காலத்தில் ஸ்விட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரிக்குத் தருவிக்கப்பட்ட இந்த மலை ரயில்இன்ஜின்கள், நீராவி மூலமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன.நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு பல ஆண்டுகளாக மலை ரயிலை இயக்கி வந்தனர். நிலக்கரித் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற நிலக்கரி போன்ற காரணங்களால் பர்னஸ் ஆயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக பர்னர்ஸ் ஆயிலில் இருந்து தற்போது டீசலுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.இவற்றுக்கான முன்னெடுப்பைச்‌ செய்தவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டெக்னீஷியன் என்பது தான் கூடுதல் சிறப்பு.

smoke,talent,employee,succeed ,மலை, ரயில் ,புகை ,வண்டி,

நீலகிரி மலை ரயில், வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்து வரும் சீனியர் டெக்னீஷியன் மாணிக்கத்திடம் பேசினோம்.

"குன்னூரைச்‌ சேர்ந்த நான் 1994-ல் இதே மலை ரயில் பணிமனையில் கடைநிலை ஊழியரா வேலையில் சேர்ந்தேன்.29 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல சீனியர் டெக்னீஷியனா உயர்ந்திருக்கேன். நீராவி இன்ஜின் மேலே எனக்கு எப்போதுமே தீராத காதல். என்னோட மூளை எப்போதும் இந்த ரயில் இன்ஜினை மட்டுமே யோசிச்சிட்டு இருக்கும். என்னோட உலகமே இதுதான்.அந்த அளவுக்கு எனக்குள்ள தாக்கம் ஏற்பட்டிருக்கு. மலை ரயில் இன்ஜினை நிலக்கரியில இருந்து மாற்று எரிபொருளுக்குக் கொண்டு வரும் திட்டம் ஒரு தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்தாங்க. அது ஃபெயிலியர் ஆனது.

அப்புறம் தொழில்நுட்பத்தில் கொஞ்சம் முயற்சி பண்ணி, பர்னர்ஸ் ஆயிலுக்குக் கொண்டு வந்தோம். 2003-ல ரயில்வே நிர்வாகம் சார்புல எனக்கு சிறந்த சேவைக்கான விருது கொடுத்தாங்க.காற்று மாசை குறைக்கும் முயற்சியா பர்னர்ஸ் ஆயிலில் இருந்து இப்போ டீசல் இன்ஜினுக்கு மாத்தியிருக்கேன். வெற்றிகரமாக ஓட ஆரம்பிச்சிருக்கு. புகை இல்லாத இந்த புகை வண்டிச் சோதனை ஓட்டத்தையும் நானே இயக்கிட்டு இருக்கேன். மலை ரயிலின் மற்ற இன்ஜின்களும் டீசலுக்கு மாற்றப்படும் வாய்ப்பு இருக்கு" என்றார்.

Tags :
|
|