Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ நீரோட்டம் .. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை உயரும் .. ஐ.நா. எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ நீரோட்டம் .. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை உயரும் .. ஐ.நா. எச்சரிக்கை

By: vaithegi Thu, 04 May 2023 11:24:34 AM

பசிபிக் பெருங்கடலில்  எல்-நினோ நீரோட்டம்  .. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை உயரும் ..  ஐ.நா. எச்சரிக்கை

இந்தியா: பூமியில் உள்ள மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலில் வருகிற மாதம் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்பு உள்ளதாக ஐ.நா அறிவிப்பு .... பூமியில் பசிபிக் பெருங்கடல் மிகப்பெரிய கடல் ஆகும்.

இந்த கடலுக்கு அமைதியான கடல் என பெயர் உண்டு. இந்த பசிபிக் பெருங்கடல் பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை இந்த கடல் ஆக்கிரமித்துயிருக்கிறது.

இதையடுத்து இந்த நிலையில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

pacific ocean,un,temp ,பசிபிக் பெருங்கடல் ,   ஐ.நா,வெப்பநிலை

இதனால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த எல்-நினோ நீரோட்டம் ஜூலை மாத இறுதியிலேயே 60% உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஜூலை மாதம் வராமல் இருந்தால் செப்டம்பர் மாத இறுதியில் 80% உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.நா வானிலை ஆய்வு நிறுவனம் கணித்து தெரிவித்து உள்ளது.

Tags :
|