Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி, நீதி அமைச்சருக்கு சிறை தண்டனை

எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி, நீதி அமைச்சருக்கு சிறை தண்டனை

By: Nagaraj Tue, 30 May 2023 11:06:10 PM

எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி, நீதி அமைச்சருக்கு சிறை தண்டனை

எல்சல்வடோர்: முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை... கடமைகளிலிருந்து விலகிய குற்றத்திற்காக எல்சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபூனஸ் மற்றும் நீதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபூனஸிக்கு 14 ஆண்டுகளும் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் முங்குயாவிற்கு 18 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

legal projects,nicaragua,former president,prison sentence ,சட்ட திட்டங்கள், நிகரகுவா, முன்னாள் ஜனாதிபதி, சிறை தண்டனை

2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்த அவர், தேர்தல் இலாபத்திற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவுடன் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நிகரகுவாவில் வசித்து வருவதுடன் 2019 ஆம் ஆண்டு அவருக்கு அந்நாட்டு பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டது. நிகரகுவா பிரஜையொருவர் வெளிநாடொன்றில் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவரை அந்நாட்டிடம் ஒப்படைக்காமல் இருப்பதற்கான சட்டதிட்டங்களே நிகரகுவாவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :