Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியா வருவது குறித்து பரிசீலனை செய்வதாக எலான்மஸ்க் தகவல்

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியா வருவது குறித்து பரிசீலனை செய்வதாக எலான்மஸ்க் தகவல்

By: Nagaraj Wed, 21 June 2023 8:47:38 PM

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியா வருவது குறித்து பரிசீலனை செய்வதாக எலான்மஸ்க் தகவல்

நியூயார்க்: பரிசீலனை செய்து வருகிறேன்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா வருவது பற்றி பரிசீலித்து வருவதாக டெஸ்லா சி.இ.ஓ.வும் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான எலான் மஸ்க் கூறினார்.

நியூ யார்க் நகரில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, எரிசக்தி முதல் ஆன்மீகம் வரை பல தரப்பட்ட விவகாரம் குறித்து உரையாடல்கள் நடந்ததாக பிரதமர் மோடி ட்வீட் ஒன்றில் தெரிவித்தார்.

elon musk,web site service,major countries,india,investment ,எலான் மஸ்க், இணைய தள சேவை, பெரிய நாடுகள், இந்தியா, முதலீடு

சந்திப்பு பற்றி பின்னர் பேட்டி அளித்த எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு தான் ரசிகனாகி இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவுக்கு சாதகமான விஷயங்களைச் செய்ய பிரதமர் விரும்புவதாக கூறிய அவர், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே வேளையில், அதன் மூலம் இந்தியாவுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

உலகின் வேறு எந்த பெரிய நாடுகளையும் விட இந்தியாவில் முதலீட்டுக்கு சாதகமான சூழல் இருப்பதாக அவர் கூறினார். ஸ்டார்லிங்க் இணைய தள நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், அதன் மூலம் இணைய தள சேவைகள் கிடைக்காத பகுதிகளும் பலன் பெறும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.

Tags :
|