Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

By: vaithegi Tue, 11 July 2023 11:41:59 AM

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு


சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் .... அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, அதற்கு எதிப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், புதிதாக பல பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஈபிஎஸ்யை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.

election commission,eps ,தேர்தல் ஆணையம் ,ஈபிஎஸ்

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று எடப்பாடி பழனிசாமி நியமித்த புதிய நிர்வாகிகளை அங்கீகரித்தும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.

நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :