Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By: vaithegi Sat, 11 Feb 2023 11:16:47 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவர்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு வழக்கம்போல தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

election commission of india,voters , இந்திய தேர்தல் ஆணையம்,வாக்காளர்கள்

இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் சரிபார்த்தது. இடைத்தேர்தல் நடப்பதால், 7-ம் தேதி வரை ( வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) சேர்கப்பட்ட பெயர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். எனவே அதன்படி இந்த இடைப்பட்டக் காலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 145 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியின் புதிய துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :