Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

By: Monisha Sun, 20 Dec 2020 2:42:34 PM

சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

வருகிற மே 24-ம் தேதியுடன் தமிழக சட்டசபையின் பதவி காலம் முடிவடைகிறது. அதனால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைக்கு பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. தமிழக தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இதற்காக 2021-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயது நிரம்பியவர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி மாதம் 5-ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவை தவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை தயார் செய்வது, கூடுதல் வாக்குச்சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கொரோனா காலமாக உள்ளதால் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால் அதற்கேற்ப கூடுதலாக வாக்கு சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

election,commission,work,voter,voter registration ,தேர்தல்,ஆணையம்,பணி,வாக்காளர்,ஓட்டுப் பதிவு

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. இதற்காக பொதுத்தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்பட ஐந்து மாநிலத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க உள்ளனர்.

ஐந்து மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் என்பது பற்றியும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக ஐந்து மாநிலத்துக்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை செல்கிறார்கள்.

Tags :
|
|