Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையம் பரிந்துரை

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையம் பரிந்துரை

By: Nagaraj Wed, 23 Dec 2020 10:31:48 PM

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தல் ஆணையம் பரிந்துரை... வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைனில் ஓட்டுப்போடலாம் என சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த தகவலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரிக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் ஓட்டுப்போட வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

electoral commission,nomination,legal department,overseas indians ,தேர்தல் ஆணையம், பரிந்துரை, சட்டத்துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் ஓட்டுச்சாவடி அமைத்தும், ஓடிபி அல்லது மெயில், இணையதள லிங்க் அனுப்பி வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க உதவலாம் என்ற கோரிக்கை நீண்ட நாட்கள் இருந்துவந்தது.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம், ஆன்லைன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்கும் முறையை இறுதி பரிந்துரையாக செய்து சட்டத்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளதாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைன் முறையில் ஓட்டளிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடக்கும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Tags :