காங்கிரஸ் தலைவர் பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்
By: Nagaraj Sat, 22 Apr 2023 6:26:00 PM
கர்நாடகா: தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை... கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.சிவக்குமார் பயன்படுத்திய ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தக்ஷின கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா பகுதிக்கு சிவக்குமார் பயணம் செய்த நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
இதுகுறித்து பின்னர் பேட்டியளித்த டி.கே சிவக்குமார், அதிகாரிகள் சோதனை செய்ததில் தவறில்லை, தேர்தல் பறக்கும் படையினர் அவர்களின் பணியைத்தான் செய்துள்ளனர் என தெரிவித்தார்.
Tags :
officers |
test |
no fault |