Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சார கார்களால் சாலைகள் இருமடங்கு சேதம்: இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தகவல்

மின்சார கார்களால் சாலைகள் இருமடங்கு சேதம்: இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தகவல்

By: Nagaraj Wed, 28 June 2023 8:18:46 PM

மின்சார கார்களால் சாலைகள் இருமடங்கு சேதம்: இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தகவல்

இங்கிலாந்து: சாலைகள் சேதமடைய காரணம்... பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை விட மின்சார கார்களால் சாலைகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய வாகனங்களை விட மின்சார கார்கள் சாலைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்து கண்டறியப்பட்டது.

specialists,warning,inspection,parking,cars,attendance ,நிபுணர்கள், எச்சரிக்கை, ஆய்வு, வாகன நிறுத்துமிடம், கார்கள், வருகை

இதனால் சாலைகளில் சிறிய அளவில் ஏற்படும் விரிசல்கள் நாளடைவில் பள்ளங்களுக்கு வழி வகுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தவிர சமீபகாலமாக எஸ்யூவி க்கள் எனப்படும் அதிக எடை கொண்ட கார்களின் வருகையும் சாலைகளைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் எடை காரணமாக அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் சேதமடையலாம் அல்லது இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்ததை அடுத்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
|