Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் புதிய அட்டவணைப்படி இயங்கும்

சென்னை புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் புதிய அட்டவணைப்படி இயங்கும்

By: vaithegi Fri, 14 July 2023 10:36:24 AM

சென்னை புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் புதிய அட்டவணைப்படி இயங்கும்

சென்னை : சென்னை புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக முக்கிய பங்காற்றுகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் 7 முதல் 15 நிமிடங்கள் இடைவெளியில் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

இதையடுத்து இந்த ரயில் சேவை அட்டவணை பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்காண புதிய அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருக்கிறது. இதனை அடுத்து அதில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, பட்டாபிராம் , அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

electric train services,chennai suburbs ,மின்சார ரயில் சேவைகள் ,சென்னை புறநகர் பகுதி

இதற்கு முன்னதாக இந்த பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 124 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே 174 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு 116 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 8 ரயில்கள் நீக்கப்பட்டதுடன் சில ரயில்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் முதலில் 80 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு அது 70 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட அட்டவணையின் படி அது 60 ரயில்களாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, சென்னை புறநகரம் மின்சார ரயில் அட்டவணை தற்போதைய பயணிகளின் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்கப்படவில்லை என கூறினார். ஏற்கனவே இயங்கும் ரயில்களின் நேரங்கள் மற்றும் மாற்றி அமைக்கப்பட்டு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Tags :