Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துண்டிக்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு

By: vaithegi Sat, 21 Oct 2023 1:13:46 PM

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மீண்டும் மின்சாரம் பயன்படுத்துவதாலும் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடுடைய மீட்டர்கள் மூலமும், மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பாடு கொண்டு வருகிறது.

எனவே இந்த வருவாய் இழப்பை தடுக்க, குறைபாடுடைய மீட்டர்களை கண்டறிந்து உடனே மாற்ற வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின் இணைப்பில் மீண்டும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

power board,electricity,meters ,மின்வாரியம் ,மின்சாரம் ,மீட்டர்கள்

இதையடுத்து இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழகம் முழுவதும் 1.75 லட்சம் ஒரு முனை மீட்டர்களும், 45000 மும்முனை மீட்டர்களும் பழுதாகி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதில் 30 ஆயிரம் இணைப்புகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கிறது.

ஆனால் அதில் மீண்டும் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் குறைபாடுகள் உள்ள மீட்டரை மாற்றாததாலும் மின் வாரியத்துக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் குறைபாடுடைய மீட்டர்களை உடனே மாற்ற பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :