Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் புதிய மொபைல் செயலியை உருவாக்க மின் வாரியம் திட்டமிடல்

மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் புதிய மொபைல் செயலியை உருவாக்க மின் வாரியம் திட்டமிடல்

By: vaithegi Wed, 25 Jan 2023 7:47:47 PM

மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் புதிய மொபைல் செயலியை உருவாக்க மின் வாரியம் திட்டமிடல்

சென்னை: மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் புதிய மொபைல் செயலி , அரசின் நிறுவனம் வாயிலாக செயல்படுத்தவும் முடிவு ..... தமிழகத்தில் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் மின் பயனர்களின் வீடுகளுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து இக்கட்டணம் குறித்த விவரம் மின் பயனர்களின் மொபைல்களுக்கு SMS வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது.

power board,mobile app ,மின் வாரியம் ,மொபைல் செயலி

இந்நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மொபைல் போன் செயலி வாயிலாகவே மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கென்று உருவாக்கப்பட்ட செயலியான கடந்த வருடம் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் மின் கணக்கெடுப்பு செய்யும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ. 69 லட்சம் செலவில் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக புதிய செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளது. இச்செயலியை மின்வாரியம் தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கவும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது

Tags :