Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ... முதலமைச்சர் அவசர ஆலோசனை

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது ... முதலமைச்சர் அவசர ஆலோசனை

By: vaithegi Wed, 14 June 2023 09:13:23 AM

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது   ...  முதலமைச்சர் அவசர ஆலோசனை

சென்னை : அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை ... துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதையடுத்து அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர் .

chief minister,power minister senthil balaji ,முதலமைச்சர் ,மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :